திருகோணமலையில் இரும்பு திருட சென்ற இரு சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை சீமெந்து தொழிற்சாலையில் இரும்பு திருட சென்ற நிலையில் கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் சந்தேகநபர்கள் இருவரும் இன்றைய தினம் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது அவர்களை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் திருகோணமலை - பூம்புகார் வீதியை சேர்ந்த 28 வயதுடைய ஜமால் முஹம்மது பாஹீம் மற்றும் அதே இடத்தை சேர்ந்த 30 வயதுடைய சித்திரவேல் கஜேந்திரன் ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை சீமெந்து தொழிற்சாலைக்குள் அனுமதி இல்லாமல் நான்கு பேர் உள் நுழைவதை சிசிடிவி கமராவின் மூலம் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டவர்கள் அவதானித்து அவர்களை சுற்றிவளைத்துள்ளனர்.

இதனையடுத்து நான்கு பேரில் இருவர் தப்பியோடிய நிலையில் மற்றைய இருவரை சீனக்குடா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இதேவேளை தப்பிச் சென்ற மற்றைய இரு சந்தேகநபர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதவான் பொலிஸாருக்கு கட்டளையிட்டுள்ளனர்.