யாழில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

Report Print Sumi in சமூகம்

யாழ்ப்பாணத்தில் இன்று போதைப்பொருள் மற்றும் புகைத்தல் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பிரதேச செயலக முன்றலில் நேற்று காலை 9.30 மணியளவில் பிரதேச செயலாளர் எஸ்.சுதர்சன் தலைமையில் இப்பேரணி ஆரம்பமாகியுள்ளது.

பேரணியில் போதைப்பொருள் மற்றும் புகைத்தலை தடுக்கும் வகையிலான வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பாதிரியார்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.