திருகோணமலையில் மாபெரும் இலவச மிருக வைத்திய முகாம்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலையில் நீர் வெறுப்பு நோய் மற்றும் கட்டாக்காலி நாய்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் மாபெரும் இலவச மிருக வைத்திய முகாமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த முகாம் இன்று மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மஹாதிவுல்வெவ பகுதியில் நடைபெற்றுள்ளது.

அத்துடன், கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்தியர் எம்.ஏ.எம்.பாஸியின் ஆலோசனையின் பேரில் திருகோணமலை மாவட்டத்தில் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இந்த நடமாடும் சேவை இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராமப்புறத்தில் விசர்நாய்க்கடி தடுப்பூசி வழங்குதல், விசர் நாய்க்கடி தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தல், கட்டாக்காலி நாய்களின் எண்ணிக்கையை குறைத்தல் போன்ற நோக்கங்களின் அடிப்படையில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நடமாடும் சேவையில் 250 இற்கும் மேற்பட்ட நாய்கள், பூனைகளுக்கு தடுப்பூசி வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.