முல்லைத்தீவு - தண்ணீரூற்று பகுதியில் விபத்து: ஒருவர் படுகாயம்

Report Print Gokulan Gokulan in சமூகம்

முல்லைத்தீவு - முள்ளியவளை, தண்ணீரூற்று பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

வீதி சோதனைக்கு பயன்படுத்தும் பரல்களில் மோட்டார்சைக்கிள் மோதியமையினால் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

சம்பவத்தில் முதலாம் வட்டராம் முள்ளியவளையினை சேர்ந்த 38 வயதுடைய ந.சத்தியன் என்பவரே காயமடைந்திருப்பதாக தெரியவருகிறது.

படுகாயமடைந்த நபர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.