வவுனியாவில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் 18 முறைப்பாடுகள்

Report Print Theesan in சமூகம்

வவுனியா மாவட்டத்தில் இவ்வருடத்தில் முதல் நான்கு மாதத்தில் 18 முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் மாவட்ட உள சமூக உத்தியோகத்தர் செ.நந்தசீலன் தெரிவித்துள்ளார்.

சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக இன்று அவரிடம் எமது செய்தியாளர் வினவிய போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

1929 என்ற சிறுவர் உதவி தொலைபேசி இலக்கத்திற்கு இவ்வருடத்தின் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதியில் 18 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இம் முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு நேரடியாக கிடைக்கப் பெற்றவையாக உள்ளதுடன் அவற்றில் அதிகளவானவை வவுனியா பிரதேச செயலக பிரிவில் இருந்தே கிடைத்துள்ளன.

இந்த முறைப்பாடுகள், சம்பவம் இடம்பெறும் வீடுகளுக்கு அருகில் உள்ளவர்கள், பாடசாலை சமூகம் மற்றும் மருத்துவ மாதுக்களால் கூடுதலாக வழங்கப்படுவதுடன் பாடசாலை இடைவிலகல் தொடர்பான முறைப்பாட்டு பதிவுகளே அவற்றில் அதிகளவானவை எனவும் அவர் கூறியுள்ளார்.