முல்லைத்தீவு, வற்றாப்பளை விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர் உயிரிழப்பு

Report Print Gokulan Gokulan in சமூகம்

முல்லைத்தீவு - வற்றாப்பளை, கேப்பாப்புலவு வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்திருந்த நிலையில் அதிலொருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

கடந்த 8ஆம் திகதி உழவு இயந்திரம் தடம் புரண்டதில் அதில் பயணித்த இருவர் படுகாயமடைந்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் அவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தனர். இதன் பின் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் மாமூலை முள்ளியவளையினை சேர்ந்த 55 வயதுடைய க.ஜெயராசாசிங்கம் என்பவரே உயிரிழந்துள்ளார்.