நன்னீரை பெற்றுக்கொள்வதில் அவதியுறும் முள்ளிவாய்க்கால் மக்கள்

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் கிராம மக்கள் 10 வருடங்களுக்கு மேலாக நன்னீர் வசதியின்றி வேறு கிராமங்கள் நோக்கி அலைந்து திரியும் அவல நிலை இன்று வரை தொடர்வதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

யுத்தத்திற்கு முன்னரான காலத்தில், இந்த கிராமத்தில் வசித்த மக்களினால் அவர்களின் சொந்தக்காணிகளில் அகழ்ந்து கட்டப்பட்ட நல்ல தண்ணீர் கிணறுகள் இறுதி யுத்தத்தின் பின்னர் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கிணற்றின் அடியூற்று நீருடன் சேர்ந்து வெடிமருந்து, இராசாயனம் என்பன நன்னீருடன் கலக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

2012ஆம் ஆண்டிற்கு பின்னர் சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்கள் அசுத்தமடைந்திருந்த கிணறுகளை பல தடவைகள் சுத்தம் செய்தபோதும் சில நாட்களில் மீண்டும் அசுத்தமாகிவிடுகின்றது என்று தெரிவிக்கின்றனர்.

சிலர் தமது வசதிக்கு ஏற்றால்போல் யுத்த பாதிப்புக்கு உள்ளாகிய பழைய கிணறுகளை மூடிய பின்னர் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் புதிய ஆழ்துளைக் கிணறுகளை உருவாக்கியுள்ளனர்.

ஆனால் அதில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் கூட சுத்தமற்றதாகவே காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.