இடைவிலகிய மாணவர்களை ஊக்குவிக்கும் நிகழ்வு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - மொரவெவ பிரதேச சபைக்குட்பட்ட நொச்சிகுளம் கிராமத்தில் பாடசாலை சென்று வறுமை காரணமாக இடைவிலகிய மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை பரஞ்சோதி கல்வி நிலையத்தின் நிதியுதவியுடன் இப்பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

மொரவெவ பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் வறுமை காரணமாக மாணவர்கள் பாடசாலைக்கு செல்லாமல் இடை விலகி வருவதினால் அம்மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பரஞ்சோதி கல்வி நிலையத்தின் பணிப்பாளர் எம். சௌந்தராஜன் தெரிவித்துள்ளார்.