யாழில் இன்று மாலை பலர் கைது

Report Print Sumi in சமூகம்

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இன்று இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொக்குவில் பொற்பதி வீதியில் உள்ள ஆலயம் ஒன்றின் பின்னால் மது அருந்திக்கொண்டிருந்த போது குறித்த அனைவரும் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சுமார் 10 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்கள், கொக்குவில் மஞ்சவனப்பதி பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த வீட்டில் பெற்றோல் குண்டை வீசியதோடு அங்கிருந்த பெறுமதி வாய்ந்த பொருள்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, குறித்த அனைவரும், இன்று மாலை கொக்குவில் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சுதுமலை பகுதியிலும், இன்று மாலை வாள்வெட்டு தாக்குதல் ஒன்று இடம்பெற்றிருந்ததாகவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.