விளையாட்டை மேம்படுத்த மஸ்தான் எம்பியால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பு

Report Print Theesan in சமூகம்

வவுனியா தோணிக்கல் ஐக்கிய விளையாட்டு கழகத்திற்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.காதர் மஸ்தானினால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினரின் விஷேட நிதியிலிருந்து வன்னி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வசதியற்ற விளையாட்டு கழகங்களுக்கு உபகரணங்கள் வழங்கப்படுகின்றது.

ஐக்கிய விளையாட்டு கழக செயலாளர் யுவன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.