இணைய பயன்பாட்டாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

Report Print Vethu Vethu in சமூகம்

இலங்கையில் ரயில் பயணங்களில் ஈடுபடுவோரின் நன்மை கருதி இலவச Wi-Fi வலையமைப்புகளை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதல்தர இணைய வசதிகளை வழங்கும் தொலைபேசி நிறுவனங்கள் இணைந்து 53 ரயில் நிலையங்களில் 83 Wi-Fi வலையமைப்புகளை ஸ்தாபிக்கவுள்ளன.

53 ரயில் நிலையங்களுக்கு முழுமையாக Wi-Fi வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது. அதற்காக அனைத்து தொலைத்தொடர்பு சேவைகளும் தங்கள் பங்களிப்புகளை வழங்கவுள்ளது.

நாட்டின் அனைத்து பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ரயில் நிலையங்களுக்காக இணைய வசதிகளை வழங்கப்பட்டுள்ளது.

இதுவரையில் மேல் மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகமாக இந்த Wi-Fi வலையமைப்புகள் காணப்படுகின்றன.

எனினும் எதிர்வரும் நாட்களில் அனைத்து மாவட்டங்களையும் பிரதிநித்துவம் செய்யும் வகையில் இந்த Wi-Fi வலையமைப்புகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த திட்டத்திற்கான அனைத்து நடவடிக்கைகளும் பிரதமர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.