மனைவியை கொலை செய்ய பெண்ணொருவருக்கு பணம் வழங்கிய கணவர்

Report Print Satha in சமூகம்
271Shares

பெண் ஒருவரை கொலை செய்வதற்காக 20 இலட்சம் ரூபா பணம் மற்றுமொரு பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ளது.

உணவட்டுன பிரதேசத்தில் வசிக்கின்ற பெண் ஒருவரை கொலை செய்வதற்காகவே இவ்வாறு பணம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

எனினும் குறித்த பெண்ணை கொலை செய்வதற்கு ஒப்பு கொண்ட பெண்ணொருவரும், அவருக்கு துணையாக இருந்த நபரும் பொலிஸாரல் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரத்கம பிரதேசத்தை சேர்ந்த பெண்னே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் உள்ளூராட்சி சபை ஒன்றின் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொலை செய்யப்படவிருந்த பெண்ணின் கணவரே இந்த ஒப்பந்தத்தை மற்றைய பெண்ணுக்கு வழங்கியுள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

குறித்தப் பெண்ணின் ஒப்பந்தம் வழங்கிய கணவர், வெளிநாடொன்றில் தொழில் புரிந்து வருவதாகவும் தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.