திருகோணமலையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்: நால்வர் கைது

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - அக்போபுர பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதுடன், இது தொடர்பில் அக்போபுர, கித்துல்ஊற்று, தல்கஸ்வெவ போன்ற பகுதிகளை சேர்ந்த 19, 20 மற்றும் 23 வயதுடையவர்களே கைதாகியுள்ளனர்.

அக்போபுர பகுதியில் நபரொருவர் மோட்டார்சைக்கிளிலில் சென்றபோது குழுவொன்று அவரை தாக்கிய நிலையிலே இது இரு குழுக்களுக்கிடையிலான மோதலாக மாறியுள்ளது.

இந்த நிலையில் சந்தேகநபர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.