பொஷன் தினத்தை முன்னிட்டு திருகோணமலை விகாரைக்கு நிதியுதவி

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

பொஷன் தினத்தை முன்னிட்டு திருகோணமலை நகரிலுள்ள பிரபல விகாரையான ஐயசுமநாராம விகாரைக்கு இஸ்லாமிய வர்த்தக நலன்புரி அமைப்பு நிதியுதவி வழங்கியுள்ளது.

திருகோணமலை இஸ்லாமிய வர்த்தக நலன்புரி அமைப்பின் உப தலைவர் நியாஸ் ஹாஜியார் தலைமையில் இந்நிதியுதவி இன்று வழங்கப்பட்டுள்ளது.

இன ஒற்றுமையை மேலோங்கச்செய்யும் நோக்கில் பொஷன் தினத்தில் செலவிடப்படும் செலவீனங்களை குறைக்கும் நோக்கில் விகாரையின் விகாராதிபதி ஞான கீர்த்தி ஹிமியிடம் இந்நிதி வழங்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் இன ஒற்றுமையை மேலோங்கச் செய்ய வேண்டும். தமிழ், முஸ்லிம், சிங்களம் என வேறுபாடு இருக்கக்கூடாது நாம் அனைவரும் ஒற்றுமையாக மற்ற மாவட்டங்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும் எனவும் இஸ்லாமிய வர்த்தக நல அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை எதிர்காலத்தில் நவீன சமூகம் சார்ந்த வியாபார சங்கம் ஒன்றினை அமைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டதுடன் எதிர்காலத்தில் அவர்கள் தம்மால் இயன்ற உதவிகளை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளனர்.