குருநாகலில் வைத்தியர் ஷாபிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Report Print Kanmani in சமூகம்

குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் ஷாபிக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்து போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் அரசாங்கத்துக்கு அழுத்தம் தெரிவிக்கும் வகையில், அக்மீமன பிரதேச சபையின் உப தவிசாளர் ஏ.கே. சுகத் உள்ளிட்டவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது அக்மீமன பிரதேச சபையின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வைத்தியர் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ள நிலையில், அவரால் பாதிக்கப்பட்ட தாய்மாருக்கு நட்டஈடு வழங்குமாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிங்கள பௌத்த பெண்களுக்கு கருத்தடை சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டதாக வைத்தியர் சாபி மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வைத்தியர் சாபியை சிறையில் வைத்து சந்தித்து குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஒப்புதல் வாக்கு மூலமொன்றை பெற ரதன தேரர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஊடாக முயற்சித்துள்ளார்.

எனினும், இந்த முயற்சி தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.