சஹ்ரான் ஹசீமின் உதவியாளருக்காக இலஞ்சம் வழங்க முற்பட்டவருக்கு பிணை

Report Print Malar in சமூகம்

சஹ்ரான் ஹசீமின் உதவியாளரான அப்துல் மொஹமட் நியாஸ் என்ற நபருக்காக ஹொரவபொத்தான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட நபருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு கொழும்பு பிரதம நீதவானால் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே பிணை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தேகநபரை 15,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் 4 இலட்சம் ரூபாவான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி மீண்டும் வழக்கை அழைப்பதற்கும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.