ஹெரோயின் போதைப் பொருளுடன் மூவர் கைது

Report Print Gokulan Gokulan in சமூகம்

ஈசீ கேஸ் உடாக பணப்பரிமாற்றம் செய்து ஹெரோயின் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட மூவரை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஹட்டன் போக்குவரத்து பிரிவு பொலிஸாரினால் நேற்று ஹட்டன் நகரில் மேற்படி மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களிடத்திலும் தலா 600 மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருள் மீட்கப்பட்டதுடன், ஈசி. கேஸ் ஊடாகவே பணப்பரிமாற்றம் செய்யப்பட்டு போதை பொருள் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரையும் இன்று ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.