மைத்திரி தலைமையில் பொசன் பெரஹெரா

Report Print Rakesh in சமூகம்

பொலன்னறுவை வரலாற்று முக்கியத்துவ மிக்க பொசன் பெரஹெரா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் வரலாற்று சிறப்பு மிக்க வட்டதாகையவுக்கு அருகில் ஆரம்பமாகியிருந்தது.

இந்த பொசன் பெரஹரா நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

சங்கைக்குரிய வென்டறுவே உபாலி நாயக்க தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினரின் அனுசரணையுடன் மாவட்டத்தின் அரச நிறுவனங்கள், விவசாய சமூகத்தினர், தன்னார்வ நிறுவனங்கள், வர்த்தக சமூகத்தினரது முழுமையான பங்களிப்பில் பெரஹெரா நடத்தப்பட்டுள்ளது.

இதில் பிரதேசத்தின் மகாசங்கத்தினர், பொலன்னறுவை நகர பிதா சானக்க சுதத் ரணசிங்க, மாவட்ட செயலாளர் பண்டுக்க அபேவர்த்தன ஆகியோர் உள்ளிட்ட பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.