மதுபான போத்தல்களுடன் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் கைது

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்

யாழ்ப்பாணத்திலிருந்து, தீவகத்திற்கு பயணிகள் பேருந்து மூலமாக கடத்தப்பட்ட சுமார் 70000 ரூபாய் பெறுமதியான மதுபான போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன் இது தொடர்பில் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மண்டைதீவு பொலிஸ் காவலரண் பொறுப்பதிகாரி விவேகானந்தராஜ் தலைமையிலான குழுவினரால் நேற்று இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேலணையை சேர்ந்த கால்நடைகளை திருடும் நபரே, இவற்றை யாழ். நகரில் கொள்வனவு செய்து அல்லைப்பிட்டியிலுள்ள ஒருவருக்கு பேருந்து ஊடாக அனுப்பி வைத்ததாக நடத்துனர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்யும் நடவடிக்கையில் ஊர்காவற்துறை பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்ற இவ்வாறான சில பேருந்துகளில் தொடர்ச்சியாக சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும், பேருந்து நடத்துனர் வாக்குமூலம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.