மாந்தோட்டம் புதுநகர் வீடமைப்பு திட்டத்திற்கான காசோலை வழங்கி வைப்பு

Report Print Mubarak in சமூகம்

அம்பாறை - நிந்தவூர் பிரதேச செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் மாந்தோட்டம் புதுநகர் வீடமைப்பு திட்டத்திற்கான காசோலை வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது.

நிந்தவூர் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.சுல்பிகார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு காசோலையை பயனாளிகளுக்கு வழங்கி வைத்துள்ளார்.

அத்துடன் இதில் நிந்தவூர் பிரதேச செயலக கணக்காளர் ஏ.ஆர்.எம்.திஸாம், நிந்தவூர் பிரதேசசபை உறுப்பினர்களான எம்.எம்.எம்.அன்சார், கே.எம்.எம்.ஜாரீஸ், றிஹானா பாயிஸ், நிந்தவூர் பிரதேச செயலக நிதி உதவியாளர் ஏ.எம்.நஜீப், வீடமைப்பு அதிகாரசபை உத்தியோத்தர்கள், பயனாளிகள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.