வடபகுதியில் பொலிஸ் திணைக்களத்திற்கு ஆட்சேர்ப்பு பதிவு நடவடிக்கைகள் ஆரம்பம்

Report Print Sumi in சமூகம்

பொலிஸ் திணைக்களத்திற்கு தமிழ் இளைஞர், யுவதிகளை ஆட்சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள நிலையில், வடபகுதியில் தமிழ் இளைஞர் யுவதிகளுக்கான ஆட்சேர்ப்பு பதிவு நடவடிக்கைகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

குறித்த ஆட்சேர்ப்பிற்கான பதிவு செயற்திட்டமானது இன்று மாலை மாலை 4 மணி வரை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

ஆட்சேர்ப்பிற்கான பதிவு நடவடிக்கையின் ஆரம்ப நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் யாழ்.மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் யாழ்.பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அனைத்து பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர்.

குறித்த இந்நிகழ்வில் பொலிஸாரினால் இளைஞர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டதோடு, சிறப்புரையினை யாழ். மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் ஆற்றியமை குறிப்பிடத்தக்கது.