மனைவியை பிரிந்த துயரில் இளம் கணவர் எடுத்த விபரீத முடிவு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

இரு பிள்ளைகளின் தந்தையொருவர் இன்று நஞ்சருந்திய நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சேருவில - தங்க நகர் பகுதியை சேர்ந்த 25 வயதுடைய அரசரட்ணம் லிங்கேஸ்வரன் என்பவரே இவ்வாறு நஞ்சருந்தியுள்ளார்.

மூதூர் - இறால் குழி பகுதியை சேர்ந்த கௌரி என்ற தனது மனைவி தன்னை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாகவும், தன்னை அவருடன் சேர்த்து வைக்குமாறு இணக்கசபைகளில் கோரியும் சேர்த்து வைக்கப்படாததால் அவர் இந்த விபரீத முடிவினை எடுத்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.