காத்தான்குடி பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவுக்குழு முன்னிலையில்!

Report Print Jeslin Jeslin in சமூகம்

ஈஸ்டர் தின குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரணை செய்யும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இன்றையதினம் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி முன்னிலையாகி தற்போது சாட்சியம் வழங்கி வருகின்றார்.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் 6ஆவது அமர்வு இன்றையதினம் இடம்பெற்று வருகின்றது.

அதன்படி, இன்றைய தினம் சாட்சியம் வழங்குவதற்காக காத்தான்குடி பொலிஸில் சேவையாற்றிய முன்னாள் பொறுப்பதிகாரி மற்றும் தற்போதைய பொறுப்பதிகாரி ஆகியோருடன், சுபீ முஸ்லிம் அமைப்பின் பிரதிநிதிகளும் சாட்சியளிக்கவுள்ளனர்.

மேலும், காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வவுணதீவு பொலிஸார் படுகொலை மற்றும் பயங்கரவாதிகள் குறித்து காத்தான்குடி மக்களால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவல்கள் தொடர்பாகவும் அவர் இதன்போது சாட்சியமளிப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது.