யாழில் மாமியாரை தாக்கி படுகாயத்திற்கு உள்ளாக்கிய மருமகன் கைது

Report Print Satha in சமூகம்

மாமியாரை தாக்கி படுகாயத்திற்கு உள்ளாக்கிய மருமகன் யாழ். சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று காலை 9 மணியளவில் உடுவில், அம்பலவாணர் வீதியில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது கழுத்து உள்ளிட்ட உடலின் பல பகுதிகளில் காயங்களுடன் மாமியார் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உடுவில் கடவுள் சந்தியை சேர்ந்த 74 வயதுடைய ஐயாத்துரை என்ற பெண்ணே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

மாமிக்கு சொந்தமான காணி ஒன்றை தமக்கு வழங்குமாறு மருமகனான சந்தேகநபர் கோரிய போதும், ஏற்கனவே சீதனமாக காணி வழங்கப்பட்டுள்ளதால் மற்றைய காணி தனது மகனுக்கு தேவை என மாமியார் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் காரணமாகவே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதுடன் , இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.