விசேட அதிரடிப்படையினரின் வாகனம் மோதி ஒருவர் காயம்

Report Print Theesan in சமூகம்

வவுனியா புகையிரத நிலைய வீதியில் இன்று விசேட அதிரடிப்படையினரின் வாகனம் மோதி ஒருவர் காயமடைந்துள்ளார்.

புகையிரத நிலைய வீதியில் இலங்கை வங்கி அருகே தரித்து நின்ற விசேட அதிரடிப்படையினரின் வாகனம் பிரதான வீதிக்கு செல்ல முற்பட்ட சமயத்தில் வவுனியா நகரிலிருந்து புகையிரத வீதி வழியாக பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளின் சாரதியான முதியவர் காயமடைந்த நிலையில், வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

மேலும் சம்பவ இடத்திற்கு போக்குவரத்து பொலிஸார் சமூகமளிக்க முன்னர் விசேட அதிரடிப்படையினர் விபத்துக்குள்ளானவரின் வாகனத்தை எடுத்துக்கொண்டு அவ்விடத்தினை விட்டு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.