சமுர்த்தி நிகழ்விற்கு அமைக்கப்பட்ட பதாதை அகற்றப்படவில்லை! மக்கள் விசனம்

Report Print Theesan in சமூகம்

வவுனியா நகரசபை மைதானத்தில் சமுர்த்தி நிவாரண உரித்துப்படிவம் வழங்கும் நிகழ்விற்கு அமைக்கப்பட்ட பதாதைகள் இன்று வரையில் நகரசபை பிரதான வாயிலிருந்து அகற்றப்படவில்லையென மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

சமுர்த்தி நிவாரண உரித்துப்படிவம் வழங்கும் நிகழ்வு கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற நிலையில் 10 நாட்கள் கடந்தும் அகற்றப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

சமுர்த்தி பயனாளிகளுக்கு நிவாரண உரித்துப்படிவம் வழங்கும் நிகழ்வு கடந்த 09.06.2019 ஞாயிற்றுக்கிழமை நகரசபை மைதானத்தில், மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

சமுர்த்தித்திணைக்களமும், மாவட்டச் செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்விற்கு ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயாகமகே, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன், அரசியல்பிரமுகர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.