நந்திக்கடலின் நீர்மட்டம் குறைவு! சிறுகடல் தொழில்கள் பாதிப்பு

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு நந்திக்கடலின் நீர்மட்டம் குறைவடைந்து சிறுகடல் தொழில்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 15 கிலோமீற்றர் நீளமுடைய முல்லைத்தீவு நந்திக்கடல் ஏரியில் சிறுகடல் தொழிலையே நம்பி வெட்டுவாய்க்கால், கேப்பாபுலவு, பிலக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு ,மந்துவில் மற்றும் இரட்டைவாய்க்கால் முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 450க்கு மேற்பட்ட மீனவக்குடும்பங்கள் வாழ்கின்றனர்.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்ட அதிகமான வெப்பநிலை காரணமாக நந்திக்கடல் ஏரியின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளமையினால்,அப்பகுதி மீனவர்களின் சிறுகடல்தொழில் பாதிப்படைந்துள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் முல்லைத்தீவு வெட்டுவாய்க்கால் பகுதியில் படகில் சென்று மீன்பிடித்தொழில் மேற்கொள்வதற்கு நீரியல் வளத்திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. எனினும் அப்பகுதியிலும் தற்பொழுது நீர்மட்டம் குறைவடைந்துள்ள காரணத்தினால் மீனவர்களின் தொழில் பாதிப்படைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.