நெடுந்தீவு பிரதேச சபை முன்னாள் தலைவர் கொலை - மேல் நீதிமன்றத்தில் நேரடியாக வழக்கு தொடர்ந்த சட்டமா அதிபர்

Report Print Steephen Steephen in சமூகம்

நெடுந்தீவு பிரதேச சபையின் முன்னாள் தலைவர் டேனியல் ரெக்சியன் கொலையுடன் சம்பந்தப்பட்ட இரண்டு பேருக்கு எதிராக சட்டமா அதிபர் நேரடியாக யாழ். மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் கமல் என்ற கந்தசாமி கமலேந்திரன் மற்றும் ரெக்சியனின் மனைவியான ரெக்சியன் அனிதா ஆகியோருக்கு எதிராகவே சட்டமா அதிபர் வழக்கை தொடர்ந்துள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் 25 மற்றும் நவம்பர் 27 ஆம் திகதிக்கு உட்பட காலத்தில் யாழ்ப்பாணம் புங்குடுதீவு பிரதேசத்தில் டேனியல் ரெக்சியன் என்பவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியமை, அதற்கு உதவியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்டமா அதிபர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.

மக்கள் மத்திய பெரும் பரப்பரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக கவனம் செலுத்திய பின்னர், சட்டமா அதிபர் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய கீழ் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகளை நடத்தாது நேரடியாக மேல் நீதிமன்றத்தில் வழக்கை தொடர தீர்மானித்துள்ளார்.