மட்டக்களப்பில் இரண்டாவது நாளாக தொடரும் போராட்டம்

Report Print Kumar in சமூகம்

கல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துமாறு கோரி மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இரண்டாவது நாளாகவும் நடைபெற்று வருகின்றது.

மட்டக்களப்பு, காந்திபூங்கா முன்பாக முற்போக்கு தமிழர்கள் அமைப்பின் உறுப்பினர்கள் இரண்டாவது நாளாகவும் சத்தியாக்கிரக போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

1989ஆம் ஆண்டு கல்முனை தமிழ் பகுதி உப பிரதேச செயலகம் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் இதுவரையில் பிரதேச செயலகமாக தரமுயர்த்துவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் தற்போது தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஒரு இனம் இன்னுமொரு இனத்தின் உரிமையினை பறிக்கும் வகையில் கல்முனையில் செயற்படுவதாகவும் கல்முனை பிரதேச செயலகம் உடனடியாக தரமுயர்த்தப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கைகளும் இதன்போது முன்வைக்கப்பட்டுள்ளன.