வவுனியாவில் நாளை நீர் விநியோகம் துண்டிப்பு!

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியாவில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் நிலைய பொறுப்பதிகாரி வி.ராகுலன் தெரிவித்துள்ளார்.

திருத்த வேலை காரணமாக நாளை காலை 8.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரை வவுனியா மாவட்டத்தில் நீர் விநியோகம் நடவடிக்கைகள் நிறுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மணிப்புரம், சுந்தரபுரம், தோணிக்கல், பண்டாரிக்குளம் மற்றும் உக்குளாங்குளம் பகுதிகளில் புதிய நீர் விநியோகம் இணைப்புக்கள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...