பட்டினியால் உயிரிழந்த 11 மாத ஆண் குழந்தை! திஸ்ஸமஹாராமை நடந்த சம்பவம்

Report Print Steephen Steephen in சமூகம்

பட்டினியால் 11 மாத ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்த சோக சம்பவம் திஸ்ஸமஹாராமை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

உணவின்றி குழந்தை உயிரிழந்துள்ளது என்பது பிரேதப் பரிசோதனையில் தெரிவந்துள்ளதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலாளர் பந்துல ஹரிஸ்சந்திர தெரிவித்துள்ளார்.

திஸ்ஸமஹாராமை - விஜயபுர கோனகமுவ என்ற கிராமத்திலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்த 11 மாத ஆண் குழந்தையின் பெற்றோருக்கு மேலும் மூன்று பிள்ளைகள் இருக்கின்றன.

குறுகிய காலத்தில் குழந்தைக்கு தேவையான போஷாக்கு நிறைந்த உணவு மட்டுமல்ல ஒரு வேளை உணவும் மிகவும் அரிதாகவே கிடைத்துள்ளது. குழந்தைக்கு போஷாக்கு குறைப்பாடு இருப்பதாக மருத்துவர்கள் கூறியதாக குழந்தையின் தாய் கூறியுள்ளார்.

குழந்தை திரிபோஷாவை விரும்பி உண்ணும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் அதனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் தாய் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பட்டினியால் உணவின்றி குழந்தை இறந்து போனது பெரும் துர்பாக்கியமான சம்பவம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.