காத்தான்குடியில் இருந்து தப்பிச்சென்ற தீவிரவாதி சஹ்ரான்! தெரிவு குழு முன்னிலையில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்

Report Print Murali Murali in சமூகம்

தீவிரவாதி சஹ்ரான் உள்ளிட்ட குழுவினரை தனக்கு தனிப்பட்ட ரீதியில் தெரியும் என காத்தான்குடி பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி ஆரியபந்து வெதகெதர தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் இன்று சாட்சியம் வழங்கிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“கடந்த 2017ம் மார்ச் மாதம் 10ம் திகதி காத்தான்குடி பகுதியில் சூபி முஸ்லிம்கள் மற்றும் சஹ்ரானுக்கு இடையில் ஏற்பட்ட கலவரத்தை அடுத்து 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

எனினும், இதன்போது சஹ்ரான் அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றார். இந்நிலையிலேயே, சஹ்ரான் உட்பட்ட குழுவினரை தனக்கு தனிப்பட்ட ரீதியில் தெரியும்.

மார்ச் மாதம் 10ம் திகதி பாரிய கலவரம் சூபி முஸ்லிம்கள் மற்றும் சஹ்ரானுக்கு இடையில் இடம் இடம்பெற்றது. இது தொடர்பில் அன்றைய தினமும், அதற்கு அடுத்த தினமுமாக 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

சஹ்ரானுடன் 150க்கும் 200க்கும் இடைப்பட்ட நபர்கள் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். சஹ்ரான் மற்றும் அவரது சகோதரர் உட்பட மற்றுமொரு நபர் இந்த சம்பவத்தை அடுத்து காத்தான்குடி பகுதியில் இருந்து தப்பிச் சென்றார்.

எனினும், காணொளி ஆதாரத்தின் மூலம் சஹ்ரான் உள்ளிட்டவர்களை தேடினோம். எவ்வாறாயினும், அப்போது கலவரத்தில் ஈடுபட்டவர்களை மாத்திரம் கைது செய்திருந்தோம். சஹ்ரான் உட்பட குழுவினர் ஆயுதம் பாவித்த ஒரே ஒரு சந்தர்ப்பம் இதுவேயாகும்.” என அவர் மேலும் தெரிவித்தார்.