யாழ். கெருடாவில் பகுதியில் 60 கிலோ கஞ்சா பொதி பொலிஸாரால் மீட்பு

Report Print Sumi in சமூகம்

யாழ். வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு தொகுதி கஞ்சா பொதி வல்வெட்டித்துறை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியில் நேற்றைய தினம் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை பொலிஸாரினால் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது யாழ். தொண்டமானாறு கெருடாவில் பகுதியில் வீடு ஒன்றிலும், அதே பகுதியில் பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து கஞ்சாபொதி கைப்பற்றப்பட்டுள்ளது.

இரண்டு இடங்களில் இருந்தும் மொத்தமாக 60 கிலோ கிராம் நிறையுடைய கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளது என வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்ததோடு, அவரிடம் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருதவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.