முல்லைத்தீவில் விவசாயிகளுக்கு அழிவினை ஏற்படுத்தும் திணையன் குருவி!

Report Print Gokulan Gokulan in சமூகம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறுபோக நெற்செய்கையினை மேற்கொண்ட விவசாயிகள் திணையன் குருவியின் தாக்கத்தினால் பாரிய பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக முள்ளியவளை, களிக்காடு, காஞ்சுரமோட்டை, புளியங்குளம் பகுதியிலே திணையன் குருவியின் தாக்கம் அதிகமாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

இவ் விடயம் தொடர்பில் விவசாயிகள் கருத்து தெரிவிக்கையில்,

முள்ளியவளையினை சேர்ந்த களிக்காடு, காஞ்சுரமோட்டை, புளியங்குளம் போன்ற பகுதிகளை சேர்ந்த 75 ஏக்கருக்கும் அதிமான விவசாய நிலங்களில் இந்த ஆண்டு சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்னும் அறுவடைக்கு குறுகிய காலம் காணப்படுவதால் தற்போது நெல்பயிருக்கு பாரிய அழிவினை ஏற்படுத்தும் திணையன் குருவியின் தாக்கம் அதிகரித்துள்ளது.

விவசாய செய்கையில் முழுமையான பயனை அடையமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

மீள்குடியேற்றத்திற்கு பின்னர் கடந்த காலங்களில் இவ்வாறு திணையன்களின் தாக்கம் இல்லை என்றும் இந்த ஆண்டு என்றுமில்லாதவாறு திணையன் குருவிகள் வயல் நெல்லினை அழித்து வருகின்றன.

இதனை யாரிடம் சொல்வது கட்டுப்படுத்துவது எவ்வாறு என்று தெரியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Latest Offers