தடை செய்யப்பட்ட இயக்கங்கள் தொடர்பில் சட்ட மா அதிபர் விடுத்த அதிரடி உத்தரவு

Report Print Kamel Kamel in சமூகம்

தடை செய்யப்பட்ட இயக்கங்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா, பதில் காவல்துறை மா அதிபருக்கு எழுத்து மூலம் நேற்று அறிவித்துள்ளார்.

கடந்த உயிர்த்த ஞாயிறு தினமன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களுடன் தொடர்புடைய தேசிய தௌஹீத் ஜமாத், ஜமாதே மிலானே ஈப்ராஹிம் மற்றும் விலயாத் அஸ் செய்லானி ஆகிய அமைப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

இந்த இயக்கங்களின் செயற்பாடுகள் மற்றும் அதன் உறுப்பினர்கள் தொடர்பில் விரிவான விசாரணை நடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

தேவாலயங்கள், ஹோட்டல்கள் மீதான தற்கொலைத் தாக்குதல்கள், சாய்ந்தமருதுவில் இடம்பெற்ற தற்கொலைத்தாக்குதல், கடந்த 2018ம் ஆண்டில் மாவனல்லவில் இடம்பெற்ற பௌத்த சிலை உடைப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த விசாரணைகள் தொடர்பிலான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பதில் காவல்துறை மா அதிபருக்கு, சட்ட மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.

Latest Offers