கொழும்பில் மீண்டும் திறக்கப்பட்ட மத்ரஸா! இயல்பற்ற சூழல் ஏற்பட்டதாக தகவல்

Report Print Ajith Ajith in சமூகம்

முஸ்லிம்களின் மத்ரஸாக்கள் தொடர்பில் இன்னும் அரசாங்கத்தினால் தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

இந்த நிலையில் கொழும்பு - மட்டக்குளிய, மோதரை பகுதியில் மத்ரஸா ஒன்று மீண்டும் திறக்கப்பட்டமையை அடுத்து அங்கு இயல்பற்ற சூழல் ஏற்பட்டது.

இந்த மத்ரஸாவில் 800 மாணவர்கள் கற்கின்றனர். மாதம் ஒன்றுக்கு அவர்கள் 1300 ரூபாவை செலுத்துகின்றனர்.

இதேவேளை குறித்த மத்ரஸாவை நீதிமன்ற உத்தரவு வரும் வரை மூடி வைக்குமாறு பொலிஸாரிடம் கோரப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...