பிற மதத்தவர்களை கொலை செய்யுமாறு குர்ஆனில் அறிவுறுத்தப்பட்டுள்ளதா?

Report Print Vethu Vethu in சமூகம்

அண்மைக்காலமாக இஸ்லாமிய மதம் தொடர்பில் வெளியாகும் கருத்துக்களுக்கு அகில இலங்கை ஜமியத்துல் உலாமா சபையின் ஊடகப் பேச்சாளர் பாசில் பாருக் மௌவி அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை கொலை செய்யுமாறு குர்ஆனில் குறிப்பிட்டுள்ளதாக சிலர் போலியான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குர்ஆனில் 6666 அதிகாரங்கள் உள்ளது. அதில் 27 அதிகாரங்கள் குறித்து தவறான அர்த்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாம் மதம் தொடர்பில் சமூக ஊடகங்களில் கற்காமல், இது தொடர்பில் முஸ்லிம் நிபுணர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளுமாறும் அவர் கூறியுள்ளார்.

குருணாகலில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


Latest Offers