நாளைய தினம் முற்றாக முடங்கவுள்ளதா கிழக்கு மாகாணம்? துண்டுப்பிரசுரங்கள் மூலம் அழைப்பு

Report Print Kumar in சமூகம்

கிழக்கு மாகாண மாணவர் பேரவையால் துண்டுப்பிரசுரங்கள் மூலம் கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் இந்த ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படவுள்ளதாக அந்த துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்த கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கு வகையில் இந்த ஹர்த்தால் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கும் முகமாக கிழக்கு மாகாணம் பூராகவுள்ள அனைத்து வர்த்தக நிலையங்கள், அரச மற்றும் அரச சார்பற்ற காரியாலயங்கள், அரச மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகள் முழு ஆதரவினையும் தந்துதவுமாறு கோரப்பட்டுள்ளது.

Latest Offers