இறுதியுத்ததினால் மாற்றுத்திறனாளிகளாகியவர்களுக்காக மருத்துவ உதவிகள் வழங்கும் முகாம்

Report Print Ashik in சமூகம்

சமூகம்சார் புனர்வாழ்வு ஊடாக மாற்றுத்திறனாளிகளை சமூகத்திற்குள் உள்வாங்கும் செயல் திட்டத்தின் கீழ், யுத்த கால பகுதியில் மாற்று திறனாளிகளாகிய மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கும் முகாம் இடம்பெற்றுள்ளது.

மாந்தை, மேற்கு பிரதேச செயலகம் மற்றும் மன்னார் பொது வைத்தியசாலையின் அணுசரணையில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தலைமையில் குறித்த மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது.

பள்ளமடு வைத்தியசாலை மற்றும் மாந்தை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நடத்தப்பட்ட மருத்துவ முகாமில் 500 இற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

அதே நேரத்தில் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டவர்களில் மேலதிக மருத்துவ தேவைகள் உடையவர்களுக்கான விசேட ஏற்பாடுகளும் விரைவில் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த மருத்துவ முகாமிற்கு மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.காண்டிபன் உட்பட மன்னார் மாட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலகங்களையும் சேர்ந்த பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றும் 10 இற்கும் மேற்பட்ட வைத்தியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers