திருகோணமலையில் வீதியை புனரமைத்துத் தருமாறு கோரிக்கை

Report Print Gokulan Gokulan in சமூகம்

திருகோணமலை மாவட்டம் தம்பலகாம பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தம்பலகாம கோவிலுக்கு முன்னால் செல்லும் வீதியை புனரமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாயிப் நகரையும் தம்பலகாம கோவில், பிரதான கொழும்பு வீதியை இணைக்கும் இவ் வீதி பல வருட காலமாக சேதமடைந்துள்ளதுடன், போக்குவரத்து செய்வதில் மக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.

மழை காலங்களில் நீர் தேங்கி நிற்பதுடன் பாடசாலை மாணவர்கள், பொது மக்கள், அரச ஊழியர்கள் என பலர் இவ்வீதியூடாக நாளாந்தம் பயணம் செய்து வருகிறார்கள்

வைத்தியசாலை தேவை நிமித்தம் இவ்வீதியூடாகவே பயணம் செய்ய வேண்டியுள்ளதுடன் குறித்த வீதியில் மின் விளக்குகள் எதுவும் இல்லாமல் இருள் சூழ்ந்த பிரதேசமாக காட்சி தருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

சுமார் ஒரு கிலோ மீற்றருக்கும் அதிக தூரத்தை கொண்ட இவ்வீதியை செப்பணிட்டுத் தருமாறு மக்கள் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Latest Offers