வவுனியாவில் தியாகிகள் தினம் அனுஷ்டிப்பு

Report Print Theesan in சமூகம்

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமான பத்மநாபாவின் 29 ஆவது சிரார்த்த தினமான தியாகிகள் தினம் வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு வவுனியா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட காரியாலயத்தில் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் தோழர் ரேகன் தலைமையில் இன்று அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் அக் கட்சியின் உறுப்பினர்கள் பத்மநாபாவின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து தீபமேற்றி வைத்துள்ளனர்.

இதன்போது கலந்துகொண்ட அனைவராலும் தீபமேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர்களான எம்.தியாகராசா, நகரசபை உறுப்பினர்கள், ஏனைய கட்சிப் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Latest Offers