கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துமாறு கோரி கவனஈர்ப்பு பேரணி

Report Print Kumar in சமூகம்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துமாறு கோரி மட்டக்களப்பில் கவனஈர்ப்பு பேரணியும், போராட்டமும் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கல்முனையில் மதத்தலைவர்களினால் முன்னெடுக்கப்படும் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவாக இந்த போராட்டம் முற்போக்கு தமிழர்கள் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினரும், முற்போக்கு தமிழர்கள் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான எஸ்.வியாழேந்திரன் தலைமையில், காந்தி பூங்காவில் பேரணி ஆரம்பமாகி மட்டக்களப்பு பேருந்து நிலையம் வரையில் சென்று மீண்டும் காந்தி பூங்காவினை வந்தடைந்துள்ளது.

அதனை தொடர்ந்து காந்தி பூங்காவில் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்த நடவடிக்கையெடுக்குமாறும் அரசாங்கத்தினை வலியுறுத்தும் வகையிலான கோசங்களும் எழுப்பப்பட்டுள்ளன.

குறித்த போராட்டத்தில் முற்போக்கு தமிழர்கள் அமைப்பின் உறுப்பினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டதுடன், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்த வேண்டும் போன்ற பதாகைகளையும் போராட்டத்தில் காட்சிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers