நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணைகளை தொடருமாறு தேரர்கள் கோரிக்கை

Report Print Kamel Kamel in சமூகம்

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணைகளை தொடருமாறு பௌத்த நாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையிலான நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்று உருவாக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த விசாரணைகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டுமென மூன்று பீடங்களையும் சேர்ந்த பௌத்த நாயக்கத் தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சபாநாயகர் கரு ஜயசூரியவை சந்தித்து பௌத்த நாயக்க தேரர்கள் இந்தக் கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

இதேவேளை, அண்மையில் இடம்பெற்ற ஒக்ரோபர் சூழ்ச்சித் திட்டத்தின் போதும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய எடுத்த முனைப்புக்கள் பாராட்டுக்குரியவை என நாயக்கத் தேரர்கள் தெரிவித்துள்ளனர்.

Latest Offers