ஜனாதிபதி, பிரதமர் தங்களது உச்ச அதிகாரங்களை பயன்படுத்த வேண்டும்! பகிரங்க எச்சரிக்கை

Report Print Kalaiyarasi Kalaiyarasi in சமூகம்

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் உரிய முறையில் காணி, நிதி அதிகாரங்களை பெற்று இயங்க நாட்டின் ஜனாதிபதி,பிரதமர் தங்களது உச்ச அதிகாரங்களை பயன்படுத்தி பெற்றுத்தர வேண்டுமென உண்ணாவிரத போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கல்முனை மக்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுத்தியே மூன்றாவது நாளாகவும் உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளதாக போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதன்போது சங்கைக்குரிய கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்தின தேரர் கருத்து தெரிவிக்கையில்,

கல்முனை மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக பௌத்த மத குரு என்ற வகையில் இப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றேன். எமது கோரிக்கை நிறைவேறும் வரை நான் என் உயிரை கொடுத்தாவது பெற்றுக்கொடுப்பதே எனது இலக்கு.

கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின் தலைவர் க.கு. சிவ சிறி. சச்சிதானந்தம் சிவம் குருக்கள் கருத்து தெரிவிக்கையில்,

நாங்கள் கல்முனை மக்களுக்காக 2ஆவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம்.

நாளை மதியம் இரண்டு மணிக்குள் அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்றப்படாவிடில் இந்த அரசு பாரிய நெருக்கடியை எதிர்நோக்க நேரிடும் என பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.

Latest Offers