அமெரிக்க இராஜாங்க செயலாளரின் இலங்கைக்கான விஜயம் இரத்து

Report Print Jeslin Jeslin in சமூகம்

தவிர்க்க முடியாத காரணத்தினால் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவின் இலங்கைக்கான விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிக்கை ஒன்றின் மூலம் இந்த விடயத்தினை இன்று அறிவித்துள்ளது.

ஜப்பானில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டிற்கான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வருகையில் தவிர்க்க முடியாத திட்டமிடல் காரணமாக இந்த விஜயத்தை மேற்கொள்ள முடியாமல் போயுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நேரத்தில் இலங்கைக்கு செல்ல முடியவில்லை என அவர் கவலை வெளியிட்டதாகவும் வேறு ஒரு நாளில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள அவர் திட்டமிட்டுள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ, இம்மாத இறுதியில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers