காத்தான்குடியில் வஹாப் கற்பிக்கும் 15 பள்ளிவாசல்கள்! அம்பலப்படுத்தும் மௌலவி

Report Print Vethu Vethu in சமூகம்

கத்தான்குடியில் வஹாப் கற்பிக்கும் 15 பள்ளிவாசல்கள் உள்ளதாக சூபீ மௌலவி தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளும் நாடாளுமன்ற தெரிவு குழுவில் மௌலவி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

கல்முனையிலுள்ள வஹாப் கற்பிக்கும் பள்ளிவாசல்களின் எண்ணிக்கை குறித்து நாடாளுமன்ற தெரிவு குழு அதிகாரிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளிக்கும் போது மௌலவி இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

வஹாப் கற்பிக்கும் பள்ளிவாசல்களின் எண்ணிக்கையை சரியாக கூற முடியாதெனவும், அவ்வாறான பள்ளிவாசல்கள் 10 - 15க்கும் இடையிலான அளவில் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அந்த நகரத்தில் 15000 பேர் உள்ளார்கள் எனவும் அவர்கள் அனைவரும் வஹாப்வாதிகள் அல்ல எனவும் மௌலவி மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers