வயோதிப பெண்ணை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் தப்பியோட்டம்

Report Print Steephen Steephen in சமூகம்

கந்தளாய் - அசுஹன பிரதேசத்தில் வயோதிப பெண்ணை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபரை கைது செய்ய கந்தளாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கந்தளாய் -அசுஹன பிரதேசத்தை சேர்ந்த 60 வயதான திருமணமாகாத வயோதிப பெண்ணே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் தற்போது ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers