யாழில் தியாகிகள் தினம் அனுஸ்டிப்பு

Report Print Sumi in சமூகம்

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமான பத்மநாபாவின் 29 ஆவது சிரார்த்த தினமான தியாகிகள் தினம் யாழில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் - புங்கன்குளம் வீதியில் அமைந்துள்ள தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் அலுவலகத்தில் கட்சியின் செயலாளர் எஸ். குமார் தலைமையில் இன்று அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, படுகொலை செய்யப்பட்ட தோழர்களின் உறவினர்களால் தீபமேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன்,தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் தலைவர் சுகு சிறிதரனால் உயிரிழந்த தோழர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இந்த அஞ்சலி நிகழ்வில், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் உட்பட கட்சி உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.