இலங்கை வரும் பிரித்தானிய பாதுகாப்பு நிபுணர்கள்

Report Print Steephen Steephen in சமூகம்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு உதவி வழங்குவதற்காக பிரித்தானிய பாதுகாப்பு நிபுணர்கள் இந்த வாரம் இலங்கை வரவுள்ளனர்.

லண்டன் மெட்ரோபொலிட்டன் பொலிஸ் பிரதிநிதிகளும் இதில் அடங்குவதாக கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டவுரிஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத தாக்குதல் சம்பந்தமாக பிரித்தானியாவில் அனுபவங்களை பரிமாறிக்கொள்ள இந்த நிபுணர்கள் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஹோட்டல் மற்றும் சுற்றுலாத்துறையில் ஒத்துழைப்புகள் தொடர்பாக இந்த நிபுணர்கள் குழு விடயங்களை பரிமாறிக்கொள்ள உள்ளது.

Latest Offers