கிளிநொச்சியில் இடம்பெற்ற போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நடை பயணம்

Report Print Suman Suman in சமூகம்

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நடை பயணம் இன்று கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது. குறித்த விழிப்புணர்வு பயணம் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றது.

கரிதாஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நடைபயணம் கிளிநொச்சி மருதநகர் பகுதியில் ஆரம்பமாகி ஏ9 வீதி ஊடாக மாவட்ட செயலகம் வரை சென்று அங்கு மகஜரும் கையளிக்கப்பட்டது.

கிராமங்களில் பயன்படுத்தப்படும் போதைப்பொருட்களை கட்டுப்படுத்த கோரியும், போதைப்பொருள் உற்பத்தி மற்றும் வியாபாரத்தினை கட்டுப்படுத்த கோரியும் குறித்த விழிப்புணர்வு பயணம் முன்னெடுக்கப்பட்டது.

போதைப்பொருள் பாவனையாளர்களை விழிப்புடன் செயற்படுமாறும் குறித்த நடைபயணம் வெளிப்படுத்தியது.

Latest Offers